ஆப்கானிஸ்தானில் 76 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

  நந்தினி   | Last Modified : 13 Jan, 2018 07:05 pm


ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையில் 76 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவ நடவடிக்கை குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், "8 மாகாணங்களில், கடந்த 24 மணி நேரம் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையில் 76 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், மூன்று முக்கிய தலிபான் தளபதிகளும் அடங்குவர். இந்த நடவடிக்கையின் போது, 14 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

நங்கர்ஹர், லாஃஹ்மான், நுரிஸ்தான், காஸ்னி, உருஸ்க்கான், ஹேரத், பார்யாப், ஜாவ்ஸ்ஜ்தான் ஆகிய மாகாணங்களில் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் போது, தீவிரவாதிகளின் பல்வேறு ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. 8 மாகாணங்களில் ஆறு சிறப்பு மற்றும் ஒன்பது அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்கான் விமானப்படை 93 விமானங்களை நடவடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்ள உதவியது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  

ஆப்கான் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், இதுவரை இது குறித்து தலிபான்களும் கருத்து தெரிவிக்கவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close