இந்தோனோஷியாவில் பங்குச்சந்தை கட்டிடம் இடிந்து 75 பேர் காயம்

  முத்துமாரி   | Last Modified : 16 Jan, 2018 08:08 am


இந்தோனேசியாவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 75 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் தேசிய பங்குச்சந்தை அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. நேற்று தீடிரென இந்த கட்டிடம் இடிந்து விழ ஆரம்பித்தது. இரண்டு தளங்களும் சரசரவென இடிந்தன. முக்கியமாக இரண்டாவது தளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பின்னர் மீட்புக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

இந்த விபத்தில் சுமார் 75 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று பங்குச்சந்தை அலுவலகத்திற்கு பல்கலைகழக மாணவர்கள் 15 பேர் வரையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close