பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிக்கும் அபாயம்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  முத்துமாரி   | Last Modified : 16 Jan, 2018 07:53 am


பிலிப்பைன்ஸில் உள்ள மாயோன் எரிமலையில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து லாவா குழம்பு வெளியாகி வருகிறது. இதன் அளவு தற்போது அதிகரித்துக்கொண்டே வருவதால் இன்னும் சில தினங்களில் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பு நிகழலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதனையடுத்து, ராணுவம் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் சுமார் 9.000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். எரிமலை வெடிப்பினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மாயோன் எரிமலை வெடிப்பில் அதிகபட்ச உயிரிழப்பாக 1814ம் ஆண்டு 1200 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2014ம் ஆண்டு இங்கு எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close