மியான்மரில் மீண்டும் பதற்றம்- போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

  நந்தினி   | Last Modified : 17 Jan, 2018 04:30 pm

மியான்மரில் புத்த மதத்தைச் சேர்ந்த ரக்ஹைன் இனத்தவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது அந்நாட்டுப் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.

மியான்மரின் வடக்கு ரக்ஹைனில் அமைந்துள்ள நகரம் மிரயுக் யு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வீழ்ந்த அரக்கன் முடியரசோடு தொடர்புடைய இந்நகரத்தில், அவ்வீழ்ச்சியின் நினைவை  அனுசரிப்பதற்காக  5000க்கும் மேற்பட்ட ரக்ஹைன் புத்த  மத்தினர் கூடியுள்ளனர். 

ஆனால் அரசு தரப்பில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அங்கிருந்த அரசு அலுவலகத்தில் ரக்ஹைன் கொடியை பறக்கவிட  புத்த மதத்தினர் முயற்சித்தாக மியான்மர் போலீஸ் தெரிவிக்கின்றது.

“பாதுகாப்புப் படையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டு, அவர்களை களையச் சொல்லி எச்சரித்தனர். ஆனால் அவர்கள்  செல்லவில்லை. அதனால் போலீசார்   அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது” என  போலீஸ் பேச்சாளர் மியோ சோ தெரிவித்துள்ளார். இதில் 7 பேர் இறந்துள்ளனர் 13 பேர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைக் காரணமாக ரக்ஹைன் பகுதியைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். ரோஹிங்கியா முஸ்லீம்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கும் இப்போது பதற்றம் ஏற்பட்டுள்ள மிரயுக் யு நகரத்திற்கும் மிகக் குறுகிய இடைவெளியே உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1784ம் ஆண்டு பர்மிய முடியரசிடம் வீழ்ந்த அரக்கன் முடியரசை தங்களது முன்னோர்கள் என   ரக்ஹைன் இனத்தவர்கள் நம்புகின்றனர். இவர்களும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால்  மியான்மரில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களான பாமர் புத்த மதத்தினருக்கும்  முரண்பாடுகள் உள்ளன. பெரும்பான்மையான ரக்ஹைன் இனத்தவர்கள் வறுமையான சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம், மியான்மரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 135 இனக்குழுக்களில் ரக்ஹைன் இனக்குழுவும் அங்கீகரிக்கப்பட்ட இனக்குழுவில் ஒன்றாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close