நைஜீரியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல்; 12 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 18 Jan, 2018 11:07 am


நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

நைஜீரியாவின் வடகிழக்கே மைதுகுரி நகரத்தில் முனா கார்கே எனும் இடத்தில் நேற்று இரண்டு பெண் தீவிரவாதிகள் தங்கள் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மைதுகுரி- முனா கார்கே பகுதி மக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் 'போகோ ஹரம்' எனும் தீவிரவாதிகள் அமைப்பு தொடர்ந்து இந்த இடத்தில் தாக்குதலை நடத்தி வருகிறது. எனவே தற்போது நடந்துள்ள தாக்குதலுக்கும் போகோ ஹரம் தீவிரவாத  இயக்கம் தான் காரணம் என காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close