ஆப்கானிஸ்தானில் தாலிபான் பிடியில் சிக்கிய சொகுசு விடுதியை மீட்டது ராணுவம்!

  Shanthini   | Last Modified : 22 Jan, 2018 02:21 am


ஆப்கானிஸ்தானில் தலிபான் பிடியில் சிக்கிய சொகுசு விடுதியை ராணுவம் மீட்டது

ஆப்கானிஸ்தான் ஆயுததாரிகள் முற்றுகையில் 12 மணிநேரம் சிக்கிய சர்வதேச சொகுசு விடுதி ராணுவத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் 1 வெளிநாட்டுப் பெண் உட்பட 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. 

விடுதியிலிருந்து 160 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. மீட்கப்பட்டவர்களில் 40 க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான், 5 பேர் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான இந்த சொகுசு விடுதி, 2011 யிலும் தலிபானால் தாக்கப்பட்டது. இது சர்வதேச பயணிகளுக்கான பிரத்யேக விடுதி என்பது குறிப்பிடத்தக்கது.

காபூலில் உள்ள சொகுசு விடுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close