காபூல் ஓட்டல் தாக்குதலில் 18 பேர் பலி

  SRK   | Last Modified : 22 Jan, 2018 02:22 am


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச ஓட்டலில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு, 5 தீவிரவாதிகள் பலத்த பாதுகாப்பு கொண்ட இன்டர்கான்டினன்டல் ஓட்டலுக்குள் புகுந்து, அங்கிருந்தவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

சுமார் 13 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலின் முடிவில், 14 வெளிநாட்டவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு படையினர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close