பெண்களின் கல்விக்காக மலாலாவுடன் இணையும் ஆப்பிள்!

  Shanthini   | Last Modified : 22 Jan, 2018 08:59 pm


சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சையியோடு இணைந்து வசதியற்ற பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.

பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க கூடாதென்ற தலிபான்களின் தடையை மீறி பெண்களின் கல்விக்காக போராடிய மலாலா, தலிபான்களின் தாக்குதலுக்குள்ளாகி காப்பாற்றப்பட்டார். சிறுவயதிலேயே பெண் கல்வி உரிமைக்காக போராடியதற்காக அவருக்கு சமாதான விருது வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் பெண்களின் கல்வி உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார். 

இந்நிலையில், தொழில்நுற்ப உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ரிம் கூக் (Tim Cook) மற்றும் மலாலா ஆகிய இருவரும் வசதியற்ற கல்வி முன்னேற்றத்துக்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,லெபனான்,நைஜீரியா ஆகிய நாடுகளில் வசதியற்ற 1 லட்சம் பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு மலாலாவுக்கு ஆப்பிள் நிறுவனம் நிதி உதவியளிக்க உள்ளது. மேலும் தமது இலக்கு இந்த 1 லட்சம் எண்ணிக்கையோடு முடிவடையப் போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close