புன்னகை மாறாத புத்த மத குரு உடல்! ஆச்சரியத்தில் சீடர்கள்

  Shanthini   | Last Modified : 24 Jan, 2018 05:24 pm


கம்போடியாவைச் சேர்ந்த புத்த குரு ஒருவர் இறந்து 75 நாள் ஆக உள்ள நிலையில், உடல்  கெடாமல் சிரித்த முகத்துடன் காணப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கம்போடியா நாட்டின் லோப்புரி மாகாணத்தைச் சேர்ந்தவர் புத்த மத குரு லூங் பொர் பியான். 92 வயதான இவர், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 16ம்  தேதி தாய்லாந்து மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.  அவரது உடல் லோப்புரியிலுள்ள பௌத்த  ஆலயத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு  பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய பெட்டியில் வைப்பதற்காக  அவரது சவப்பெட்டியை சீடர்கள் திறந்தனர். அப்போது உடல் கெடாமல் இருந்துள்ளது. இறந்து பல வாரங்கள் கடந்த நிலையிலும் அவரது முகத்தில் அதே புன்னகை காணப்பட்டது. இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் அவரது சீடர்கள் பகிர்ந்துள்ளனர்.  அவரது இறப்பின் 100வது நாளில் இறுதி அஞ்சலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close