தென் கொரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 41 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தென் கொரியாவின் மிர்யாங் நகரத்தில் உள்ள சிஜாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) 7.30 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ மருத்துவமனை முழுவதும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். இதில், 93-க்கும் மேற்பட்டோர் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மற்றவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த தீவிபத்தில் 41க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.