ஆம்புலன்சில் வெடிகுண்டு; 40 பேர் பலி

  SRK   | Last Modified : 28 Jan, 2018 10:19 am


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 40 பேர் உயிரிழந்தனர்; 140 பேர் காயமடைந்தனர். ஒரு ஆம்புலன்ஸ் முழுக்க வெடிகுண்டுகளை நிரப்பி  தீவிரவாதிகள் வெடிக்கச் செய்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

ஆப்கான் அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனால், ஆம்புலன்ஸ் மூலம் அந்த பகுதிக்கு அருகே தீவிரவாதிகள் சென்றுள்ளனர். முதல் தடுப்பரணை தாண்ட முடிந்தாலும், கடும் பாதுகாப்பு காரணமாக தூதரகங்கள் அமைந்துள்ள தெருவுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. அதனால் அதிக மக்கள் நடமாட்டம் இருந்த அந்த தெருவில் குண்டை வெடிக்கச் செய்தனர். 

அந்த பகுதியின் மருத்துவமனைகள் முழுவதும் படுகாயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை நிலவுகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close