காபூல் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு

  SRK   | Last Modified : 28 Jan, 2018 10:20 am


இன்று மதியம், ஆப்கான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரு ஆம்புலன்ஸ் முழுக்க வெடிகுண்டுகளை நிரப்பி, அதை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வெடிக்கச் செய்தனர். 200க்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்தனர்.

அமைச்சர் அலுவலகம் இருந்த தெருவை நோக்கி இந்த ஆம்புலன்ஸ் வந்ததாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தியவுடன் உள்ளிருந்த தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் காபூல் போலீசார் தெரிவித்துள்ளனர். 

தங்கள் அமைப்பை சேர்ந்த ஒருவர் இந்த தாக்குதலில் இறந்ததாக தலிபான் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close