கிரிபட்டி- 50 பேருடன் காணாமல் போன படகு 7 பேருடன் கண்டுபிடிப்பு

  Shanthini   | Last Modified : 29 Jan, 2018 01:48 pm


கடந்த வாரம் 50 பேருடன் காணாமல் போன கிரிபட்டி நாட்டைச் சேர்ந்த படகு 7 பேருடன் பசிபிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள 43 பேரை தேடும் பணி தொடர்கிறது.

மத்திய பசிபிக் தீவில் அமைந்துள்ள கிரிபட்டி நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. புட்டிராவோய் என்ற படகு 50 பேருடன் கடந்த வாரம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து விமானப்படை நடத்திய தேடுதலில் நேற்று 7 பேருடன் கிரிபட்டி படகு, பசிபிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், தகவல் தொடர்பு கருவிகளையும் நியூசிலாந்து விமானப்படை வழங்கியுள்ளது. 

இதுபற்றி நியூசிலாந்து நாட்டு விமானப்படை அதிகாரி டேரின் வெப் கூறும்போது, “மாயமான கிரிபட்டி படகை, P-3K-2 ஆரியன் விமானம் கண்டுபிடித்துள்ளது. அந்த படகில் ஒரு குழந்தை மற்றும் 6 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு விமானம் உணவுப்பொருட்களை அளித்துள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close