பிலிப்பைன்ஸில் ஓரிரு நாட்களில் மாயோன் எரிமலை வெடிக்கும் அபாயம்

  முத்துமாரி   | Last Modified : 30 Jan, 2018 09:44 pm


பிலிப்பைன்ஸில் உள்ள மாயோன் எரிமலையில் அதிகப்படியான தீக்குழம்பு வெளியேறுவதால் ஓரிரு நாட்களில் எரிமலை வெடிப்பு நிகழலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் அல்பே மாகாணத்தில் உள்ள மாயோன் எரிமலையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி முதல் லாவா என்ற தீக்குழம்பு வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களாக அத்துடன் சாம்பலும் வெளிவருகிறது. முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது 'எச்சரிக்கை அளவு 4' லிருந்து 'எச்சரிக்கை அளவு 5' ஆக மாற்றப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் எரிமலை வெடிப்பு நிகழலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே ராணுவம் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த எரிமலை வெடிப்பினால் மக்களுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மாயோன் எரிமலை வெடிப்பில் அதிகபட்ச உயிரிழப்பாக 1814ம் ஆண்டு 1200 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close