காபூலில் பயங்கர நிலநடுக்கம்; பாகிஸ்தானில் குழந்தை பலி

  நந்தினி   | Last Modified : 01 Feb, 2018 10:33 am


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. காபூலில் உள்ள இந்து குஷ் மலைகளில் 180 கிமீ ஆழத்தில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காபூலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

காபூலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தானிலும் எதிரொலித்தது. இந்த நில நடுக்கத்துக்குப் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில், குழந்தை ஒன்று உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்தப பகுதியில் மக்கள் மண் சுவற்றில் வீடு கட்டி வசிப்பதால், பல வீடுகள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

நில நடுக்கத்தின் அதிர்வு வட இந்தியாவிலும் உணரப்பட்டது. சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு காரணமாக மக்கள் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பாதிப்பு பற்றிய தகவல் ஏதும் இல்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close