இரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை- எங்கே தெரியுமா?

  Sujatha   | Last Modified : 01 Feb, 2018 10:43 am


வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது. கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து முதல் மனைவி போலீஸில் புகார் அளிக்கும் பட்சத்தில், கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இது எரித்திரியா நாட்டில் செல்லுபடி ஆகாது. அங்கு ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் தான் சிறைத்தண்டனை.

ஏனெனில் எரித்ரியா நாட்டில் அடிக்கடி போர் நடந்து கொண்டிருக்கும் என்பதால் போரில் ஆண்கள் பலர் இறக்கின்றனர். இதனால் ஆண்களின் எண்ணிக்கை சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. இதனை சரிக்கட்டவே  அந்நாட்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இரண்டாவது திருமணம் செய்ய ஆணோ அல்லது அவரது முதல் மனைவியோ தடை விதிக்கும் பட்சத்தில், இருவருக்கும் சிறை தண்டனை நிறைவேற்றப்படும். அதேபோல் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close