ஆப்கானிஸ்தான்: 9 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொலை; 18 பேர் படுகாயம்

  நந்தினி   | Last Modified : 03 Feb, 2018 08:09 pm


ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் அரசு படைகள், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் வேட்டையில் இறங்கிய போது, 9 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 9 பாதுகாப்பு படையினர் உள்பட 18 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அரசு படைகள் நடத்திய இந்த தாக்குதல் நடவடிக்கையால், பொது மக்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் அந்தர், டெயாக் மாவட்டங்களில் நடந்துள்ளது. பல வகையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள், இந்த தாக்குதலின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை தலிபான்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close