சிரியாவில் வான்வழித் தாக்குதல்: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

  முத்துமாரி   | Last Modified : 07 Feb, 2018 07:05 pm


சிரியாவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் இதுவரை 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அந்நாட்டு அதிபர் பசார் அல்-ஆசாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் இறங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ‘சுகோய்-25’ போர் விமானத்தை தீவிரவாதிகள் தாக்கி அழித்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக டமாஸ்கஸ் பகுதியில் தீவிரவாதிகளின் இருக்கும் இடங்களை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த தாக்குதலில் இதுவரை 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close