வெனிசுவேலாவில் அதிபர் தேர்தல் அறிவிப்பு

  SRK   | Last Modified : 08 Feb, 2018 09:19 am


கடந்த சில வருடங்களாக பஞ்சம், பட்டினி என பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே இருந்த வெனிசுவேலா நாட்டில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடுரோவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வந்தது. அவர் எடுத்த முடிவுகளால் எண்ணெய் வளம் கொண்ட அந்த நாடு தற்போது மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால்,  அதிபர் மடுரோ, வெனிசுவேலாவில் உள்ள பிரச்சனைகளுக்கு  அந்நிய சக்திகள் தான் காரணம் என கூறி வருகிறார்.

இதற்குமுன் நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது, எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தின. ஆனால், போராட்டத்தை மீறி லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர்தலில் வாக்களித்தனர். இது எதிர்க்கட்சிகளுக்கு பேர் அடியாக அமைந்தது.

இந்த முறை அதிபர் தேர்தல் வருவதனால், எதிர்கட்சிகள் தேர்தலில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க வேண்டிய நிலையில், அதற்கு முன் எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்துவிடுவார்களோ என பயந்து, வரும் ஏப்ரல் 22ம் தேதி தேர்தல் நடத்த அதிபர் மடுரோ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் பங்குபெற்றாலும், பெறாவிட்டாலும் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு தேர்தல் கமிஷனுக்கு அதிபர் மடுரோ உத்தரவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close