சீனா, பாகிஸ்தான், சவூதி நாடுகளில் உதவி கோரும் மாலத்தீவு அதிபர்!

  முத்துமாரி   | Last Modified : 08 Feb, 2018 05:00 pm


மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை சமாளிக்க சீனா, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் ஆதரவை பெற திட்டமிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் அப்துல் யாமீன்.

மாலத்தீவின் அதிபர் அப்துல் யாமீன், அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் முஹம்மது நஷீத் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து வருகிறார். வரம்பு மீறி, முழு அதிகாரத்துடன் ஆட்சி செய்ய நினைக்கும் அப்துல் யாமீனின் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இதற்காக எதிர்கட்சித்தலைவர் முஹம்மது நஷீத் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளார். மாலத்தீவு எதிர்க்கட்சிகளுக்கு இந்தியா உதவக்கூடாது எனவும் அவ்வாறு உதவி செய்தால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனா இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் தனக்கு சீனா உதவும் என்ற நம்பிக்கையில் அதிபர் அப்துல் யாமீன் சீனாவிடம் ஆதரவு கேட்கவுள்ளார். மேலும், பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிடமும் ஆதரவை பெற அவர் திட்டமிட்டுள்ளார். இந்த 3 நாடுகளுக்கும் தங்களது ஆதரவாளர்களை அனுப்பி ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close