தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்: வடகொரிய அதிபரின் தங்கை வருகை

  முத்துமாரி   | Last Modified : 09 Feb, 2018 04:08 pm


தென்கொரியாவில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக வடகொரிய அதிபரின் சகோதரி தென் கொரியா வந்துள்ளார். 

அணு ஆயுத சோதனை காரணமாக வடகொரியா- தென் கொரியா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் தென் கொரியாவில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இதில் வடகொரிய நாட்டினரும் பங்கேற்பது உலக நாடுகளிடையே முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய அதிபரின் குடும்பத்தினர் ஒருவர் தென்கொரியா வந்துள்ளது ஒரு வரலாற்று நிகழ்வு என்றே கூறப்படுகிறது. 


வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் இன்று காலை தென் கொரியா வந்துள்ளார். அவருடன் 10க்கும் மேற்பட்ட வடகொரிய பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர். அவர்களை தென் கோரிய அதிகாரிகள் இன்று விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர். 3 நாட்கள் பயணமாக தென் கொரியா வந்துள்ள கிம் யோ ஜாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் முக்கிய விருந்தினராக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்துகொள்கிறார். இந்த ஒலிம்பிக் போட்டியானது இன்று தொடங்கி வருகிற 25ம் தேதி முடிவடைகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close