மாலத்தீவு பிரச்னைக்கு ஐ.நா. தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்

  முத்துமாரி   | Last Modified : 10 Feb, 2018 08:40 am


மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை சமாளிக்க ஐ.நா. தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

மாலத்தீவின் அதிபர் அப்துல் யாமீன், அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் முஹம்மது நஷீத் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து  வரம்பு மீறி செயல்பட்டுவருகிறார். முழு அதிகாரத்துடன் ஆட்சி செய்ய நினைக்கும் அப்துல் யாமீனின் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இதற்காக எதிர்கட்சித்தலைவர் முஹம்மது நஷீத் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளார். மாலத்தீவு எதிர்க்கட்சிகளுக்கு இந்தியா உதவக்கூடாது என சீனா ஒருபக்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதனையடுத்து சீனா, பாகிஸ்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிடம் மாலத்தீவு அதிபர் ஆதரவை பெற திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே மாலத்தீவில் மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை சமாளிக்க  ஐ.நா. இதில் தலையிட்டு தகுந்த தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close