இந்தோனேசியா: பேருந்து- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; 27 பேர் பலி

  நந்தினி   | Last Modified : 11 Feb, 2018 06:09 am


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், 27 பேர் பலியானதோடு, 18 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். அந்த மாகாணத்தில் உள்ள சிசென்ங்க கிராமத்தின் சுபாங் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இருசக்கர வாகனத்துடன் மோதிய அந்த பேருந்து, அதன் பின் ஒரு மலையின் மேல் மோதியதாக காவல் துறை கூறியுள்ளது. மேலும், இதனால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பேருந்தில் மொத்தம் 45 பேர் பயணம் செய்துள்ளனர். அதில், 27 இறந்ததாகவும், 18 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் சுபாங் மாவட்ட அரசு மருத்துமனை தகவல் வெளியிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close