யுஎஸ் ட்ரான் தாக்குதலில் இரண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் பலி

  நந்தினி   | Last Modified : 11 Feb, 2018 06:32 am


நேட்டோ (NATO) மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள், ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் நடத்திய ட்ரான் தாக்குதலில் இரண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். "அச்சின் மாவட்டத்தில் உள்ள பண்டார் வட்டாரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று மாகாண அரசு தெரிவித்தது.

2015ம் ஆண்டு ஐஎஸ் குரூப் நாங்கர்ஹரில் உருவானது. இந்த தாக்குதல் குறித்து ஐஎஸ் தரப்பில் எந்த ஒரு கருத்தும் வெளியாகவில்லை. நேற்று முன்தினம், அருகில் இருக்கும் காணி கில் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், ஒரு வெடிக்கும் பொருளை அப்புறப்படுத்தினர். அதே நாள், நாங்கர்ஹர் பட்டி கோட் மாவட்டத்தில், ஒரு கிரிக்கெட் மைதானத்தில் வெடி பொருள் வெடித்ததில் பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close