புதிய தென் ஆப்பிரிக்க அதிபராக சிரில் ராமபோஸா தேர்வு

  SRK   | Last Modified : 15 Feb, 2018 09:26 pm


தென் ஆப்பிரிக்க அதிபராக சுமார் 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஜேக்கப் ஜூமா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பல ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த அவர், அனைத்து தரப்பின் வலியுறுத்தலுக்கு பிறகு, ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில், துணை அதிபராக இருந்து வந்த சிரில் ராமபோஸா இன்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றம் அவரை இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்தது. "தென் ஆப்பிரிக்க மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன்" என அவர் கூறினார். 

சில மாதங்களுக்கு முன், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ஜூமா நீக்கப்பட்டார். அதன்பின், சிரில் ராமபோஸா கட்சியின் தலைவராக்கப்பட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close