சவூதி அரேபியாவில் பெண்கள் தனியாக தொழில் தொடங்க அனுமதி!

  முத்துமாரி   | Last Modified : 19 Feb, 2018 02:02 pm


சவூதி அரேபியாவில் பெண்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் தானாகவே தொழில் தொடங்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

சவூதி அரேபியாவில் தற்போது பெண்களுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசர் முகமது பின் சல்மான் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டு வந்த பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான கல்வி உரிமை, வாக்களிக்கும் உரிமை, பெண்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதிப்பது, வாகன ஓட்டுநர் உரிமை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சவூதி பெண்களுக்கு தொழில் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சவூதியில் பெண் ஒருவர் தொழில் தொடங்க வேண்டுமென்றால் அவரது தந்தை, கணவர் அல்லது சகோதரர் யாரிடமாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது பெண் ஒருவர் தொழில் தொடங்க அரசு அனுமதி அளிக்கும் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. சவூதியில் தொழில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கு பெண்களும் தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த விதிமுறையை தளர்த்தியாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close