சிரியாவில் தொடரும் தாக்குதல்; பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு

  முத்துமாரி   | Last Modified : 23 Feb, 2018 03:35 pm


சிரியாவில் 5வது நாளாக தொடரும் உள்நாட்டுப்போரில் பலி எண்ணிக்கை  400ஆக உயர்ந்துள்ளது. 

சிரியாவில் அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் சிரியாவுக்கு ரஷ்ய படைகள் உதவி வருகின்றன. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் வான்வழித்தாக்குதலில் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் நாளில் சுமார் 80 பேர் இந்த தாக்குதலில் மரணமடைந்த நிலையில் இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 400க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இவர்கள் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலில் குழந்தைகளும் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள கவுட்டா பகுதியை மீட்கும் பொருட்டு சிரிய படைகள் கிளர்ச்சியாளர்களின் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close