சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் பலி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 24 Feb, 2018 08:30 am

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்த இரட்டை தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் தாக்குதல் தற்கொலைப்படை தீவிரவாதி காரில் வெடிகுண்டு பொருள்களை நிரப்பி வெடிக்கச் செய்தான். அதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சிறிது நேரத்தில் நாட்டின் அதிபர் மாளிகைக்கு அருகே மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அல்கொய்தா ஆதரவு அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


பிரபல ஹோட்டலுக்கு அருகேயும் அதிபர் மாளிகைக்கு அருகேயும் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சோமாலிய அரசு பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் மொகடிசு நகரில் அல் ஷபாப் தீவிரவாதிகள் வெடிபொருள் நிரப்பிய லாரியை வெடிக்க செய்ததில் சுமார் 512 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close