அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதுள்ள மக்கள் அபிமானம் அதல பாதாளத்தில் உள்ளது.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் அவருக்கு, முன்னதாக மக்களிடம் எடுக்கப்படும் அபிமான கருத்துக்கணிப்பில் ஒரு சிறிய முன்னேற்றம் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் சரிந்துள்ளது.
பொருளாதார முன்னேற்றத்தை மையமாக கொண்டு சமீபத்தில் அவர் தன்னை பெருமையாக பேசி வந்தார். ஆனால், பங்குச்சந்தை கடந்த சில வாரங்களில் வரலாறு காணாத சரிவை கண்டது. மேலும், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து மாணவர்கள் பல இடங்களில் கனரக துப்பாக்கிகளை மக்கள் கையில் வரவிடாமல் தடுக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் மீது எந்த தடையும் விதிக்கக் கூடாது என திட்டவட்டமாக கூறிவரும் டிரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது அதிபர் டிரம்ப் மற்றும் அவரது கட்சிக்கு மேலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.