சிரியாவில் தினம் 5 மணி நேரத்துக்கு மனிதாபிமான பாதைகள் அமைப்பதற்கான போர் நிறுத்தம் சீர்குலைக்கப்பட்டது.
சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் மனிதாபிமான பாதைகள் அமைக்க தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புடின்வலியறுத்தினார். செவ்வாய்கிழமை முதல் நடைமுறைபடுத்த இருந்த இந்தப் போர் நிறுத்தத்தை முன்னிட்டு, மக்கள் தப்பி செல்வதற்கான பாதைகளை அமைக்க சிரியா செம்பிறைச் சங்கம் தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் மக்கள் வெளியேறும் பாதை மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவும், சிரிய அரசு படைகள் வான்வழித் தாக்குதல் தொடுத்ததாக, பிரிட்டனைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவும் ஒருவரை ஒருவர் பரஸ்பர குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவிகளை செய்ய முடியாமல் போனதாக ஐ.நா செய்திதொடர்பாளர் கூறியுள்ளார். எனவே, தற்காலிக போர் நிறுத்தம் புதன்கிழமை காலை முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.