அண்டார்டிகாவில் ரகசியமாக வாழும் 10 லட்சம் பென்குயின்கள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Mar, 2018 06:57 pm


அண்டார்டிக்காவின் தீபகற்ப பகுதியில் சுமார் 10 லட்சம் பென்குயின்கள் ரகசியமாக வாழ்வது செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


பென்குயின்கள் பொதுவாக குளிர் பிரதேசங்களிலேயே கூட்டமாக வாழ்ந்துவருகின்றன. இவ்வாறு பென்குயின்கள் வாழும் பல பிரதேசங்கள் ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அறியப்படாத அண்டார்டிக்காவின் கிழக்குப் பகுதியில் வெடெல் கடலில் உள்ள டேஞ்சர் தீவுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்லி வகை பென்குயின்கள் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார்  751,527 ஜோடிகள் பென்குயின்கள் வரை அங்கு வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டட்டமே இல்லாத பரந்த கடல் வனப்பகுதியில் இந்த பென்குயின்கள் சுற்றி திரிவது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச ஆராய்ச்சிக் குழுவின் பேராசிரியர் டாம் ஹார்ட் என்பவர் செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு 2014ம் ஆண்டிலிருந்து தனது ஆய்வுகளை பென்குயின்களை நோக்கி நகர்த்தியுள்ளார். முதலில் செயற்கைக்கோள் படங்களில் பறவைகளின் எச்சங்கள் மட்டுமே தென்பட்டதாக கூறும் டாம், பறவைகளின் எச்சத்தை பார்த்து தான் ஆய்வில் இறங்கியதாகவும் அதன்பின் தன் அவை பென்குயின்கள் என கண்டறியபட்டதாகவும் தெரிவித்துள்ளார். 


லூசியானா மாநில பல்கலைக் கழக ஆய்வாளர் மைக்கல் பொலிட்டோ இதுகுறித்து கூறுகையில், பென்குயின்கள் இப்பகுதியில் ரகசியமாக வாழ காரணம் இப்பகுதி 1.8 மில்லியன் சதுர கிமீ தண்ணீரால் சுழ்ந்துள்ளது. அண்டார்க்டிக் தீபகற்பத்தைச் சுற்றி அனைத்து பகுதிகளிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பென்குயின்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் கடல் உயிரிகள் அதிகமாக காணப்படுகின்றன. அவைகள் வாழ்வதர்கு தகுந்த பனி அடர்ந்த சூழலும் இங்கு அழகாக அமைந்துள்ளது. பென்குயின்கள் மட்டுமல்லாது, நீல திமிங்கலங்கள், சிறுத்தைகள் போன்ற உயிரினங்களும் இப்பகுதியில் அதிகம் வாழ்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ராஜா பென்குவின் என அழைக்கப்படும் பல நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த பழமையான பென்குயின் இங்குதான் வாழ்ந்து மறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.