இளைஞர்களை ஈர்க்கும் புதிய கலாசாரம் ’ஸ்பீட் டேட்டிங்’!

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Mar, 2018 06:03 pm


‘ஸ்பீட் டேட்டிங்’ என்பது இந்தியாவில் தற்போது ட்ரெண்டில் உள்ள லேட்டஸ்ட் கலாச்சாரம். இதனை மேற்கத்திய கலாச்சாரம் என்று கூட சொல்லலாம். தற்போது இளைஞர்களின் மோகம் ஸ்பீட் டேட்டிங் மேலே தான்.


ஸ்பீட் டேட்டிங் எனும் நவீன சுயம்வரம் என்றே கூறலாம். அதாவது ஆண்களும் பெண்களும், இணையதளத்தில் பதிவு செய்து தங்களுக்கு பொருத்தமான துணையை தேடும் நவீன வடிவம் தான் இந்த வலைதளங்கள். ஸ்பீட் டேட்டிங்க்கில் தான் இளைஞர்களின் நாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. 

'லைஃப் ஆஃப் லைன்' என்ற அமைப்பு, இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் ஸ்பீட் டேட்டிங் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. 2016ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு இந்த சேவைகளை வழங்கிவருகிறது. ஸ்பீட் டேட்டிங் செய்ய விரும்புபவர்கள் ஸ்பீட் டேட்டிங் வலைதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த நவீன சுயம்வரத்தில் இணையலாம்.

இங்கு பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களை சந்திக்கலாம். காதலையோ, டேட்டிங்கையோ மட்டும் தேடி வரவேண்டும் என்று அவசியம் இல்லை. நட்பு கொள்ளவும், இயல்பாக பேசிப் பழகவும்கூட ஸ்பீட் டேட்டிங்கிங்கிற்கு வரலாம் என 'லைஃப் ஆஃப் லைன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.


ஸ்பீட் டேட்டிங் இந்தியாவுக்கும் புதுசு என்றாலும் வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணம் என்றே சொல்லலாம். சம்பந்தமே இல்லாத ஒருவரிடம் நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து தங்கள் வாழ்க்கைத் துணையை தேடும் வேலையை 'லைஃப் ஆஃப் லைன்' என்ற அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு 8 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

அதில் ஒருவரை ஒருவர் தங்களை குறித்து அறிமுகம் செய்துகொள்கிறார்கள். தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளகிறார்கள். இப்படி பேசி பழகிவிட்டு உடனே துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மேலும் துணை மட்டுமல்லாது நண்பர்களை கூட நீங்கள் இந்த ஸ்பீட் ஸ்டேட்டிங் மூலம் பெறலாம். இக்கலாச்சாரம் நம் நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? என தெரியவில்லை. ஆனால் மொபைலில் ஆண், பெண்களுடன் சாட் செய்வது போல தான் நேரில் சாட் செய்வது இதில் என்ன தப்பு இருக்கிறது என்கிறது இன்றைய தலைமுறை. 

காபி கொடுத்த 10 நிமிடத்தில் துணையை கன்பார்ம் செய்யும் காலம் மறைந்து ஹோட்டலில் 8 நிமிடம் கதை பேசி துணை தேர்ந்தெடுக்கும் இந்த மேலை கலாச்சாரம் இந்தியர்களுக்கு சரிப்பட்டு வராது என்பதே பல பெரியோர்களின் விருப்பமாக உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.