ரூவாண்டா: இடி தாக்கியதில் 16 பேர் பலி

  SRK   | Last Modified : 11 Mar, 2018 06:59 am


ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவில் கடந்த இரண்டு தினங்களில், இடி தாக்கிய சம்பவங்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளியன்று ஒரு பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் இடி தாக்கியதில் இறந்தனர். அதேபோல நேற்று, தெற்கு ரூவாண்டாவின் நியாறுகுறு பகுதியில், பொதுமக்கள் 45 பேர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென இடி தாக்கியது.

இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர், ஆபத்தான நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். 

உலகிலேயே அதிகம் இடி தாக்கும் பகுதிகளில் ரூவாண்டாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close