எரிமலையில் விழுந்த இடி (வீடியோ)

  ஐஸ்வர்யா   | Last Modified : 17 Mar, 2018 07:22 pm


வடக்கு பசிபிக் பெருங்கடல் தீவில் இருக்கும் எரிமலை மீது இடி விழுந்துள்ளது. இதனை வீடியோவாக விஞ்ஞானிகள் எடுத்துள்ளனர்.

பொதுவாக மழைகாலத்தின் போது மின்னல், இடி ஏற்படுவது வழக்கம். ஆனால் எரிமலை மீது இடிவிழும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரங்கள் மீது இடி விழுந்தால் தீ பிடித்துவிடும், மின்கம்பங்கள் அல்லது கோபுரங்கள் மீது விழுந்தால் எரிந்துவிடும். இது நாம் எப்பொழுதும் பார்த்த விஷயம். அதேபோல் மாட்டின் சாணத்தின் மீது இடி விழுந்தால் சாணம் முழுவதும் தங்கமாக மாறும் என பெரியவர்கள் சொல்வதுண்டு. 

இந்நிலையில் எரிமலை குழம்பு மீது இடி விழுந்தால் என்ன நிகழும். இதுவரை அப்படியொரு நிகழ்வு நடந்துள்ளதா என்றால் இல்லை என்றே சொல்கின்றனர் விஞ்ஞானிகள்.வரலாற்றில் முதன் முறையாக எரிமலை மீது இடி, மின்னல் விழுந்ததை விஞ்ஞானிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.


 வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில், 300க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்டது அலூசியன் தீவுகள். இந்த தீவில் கடந்தாண்டு இறுதியில் வானம் மேகமூட்டத்துடன், பெரும் இடிஇடித்துக் கொண்டிருந்தது. இந்த இடியின் ஒலி வழக்கத்தைவிட சற்று மாறுபட்டு இருந்தது. இதனையடுத்து அந்த ஒலியை புவிஇயற்பியல் விஞ்ஞானிகள் ஒலிபதிவு செய்து விட்டு, பின்னர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்படி ஒரு அதிர்வு, மனிதனை மிரட்டும் ஒலியை கண்டு அதிர்ச்சியடைந்த விஞ்ஞானிகள், அந்த குறிப்பிட்ட நாள், மணி நேரத்தைக் கொண்டு, அன்றைய தினத்தில் தீவில் நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்தனர். அப்போது தான், எரிமலை மீது இடி விழுந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தனர்.

இது குறித்து புவிஇயற்பியல் விஞ்ஞானிகள் கூறுகையில், ’சம்பவத்தன்று குறிப்பிட்ட எரிமலையில் இருந்து 40 மைல் தொலைவில் இருந்து பூம் மைக் மூலம் ஒலிப்பதிவு செய்ததாகவும், காதை பிளக்கும் இந்த இடியின் ஒலி, வழக்கமான இடியின் ஒலியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மேலும், எரிமலை மீது இடி விழுந்த இந்த சம்பவம் வரலாற்றில் முதன்முறையாக தற்போது பதிவாகியுள்ளது’ என்று கூறினர்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close