மணிலா: வீட்டின் மீது விமானம் மோதி விபத்து; 9 பேர் பலி

  நந்தினி   | Last Modified : 17 Mar, 2018 09:25 pm


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சிறிய பயணிகள் விமானம் இன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு இன்ஜின் கொண்ட பைபர் 23 அப்பாச்சி விமானம், இரண்டு விமானிகள் உள்பட 6 பேரை கொண்டு, மணிலாவின் புளகான் மாகாணத்தில் இருந்து லயோக் என்ற இடத்திற்கு புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒரு வீட்டின் மீது மோதியுள்ளது. இதில், விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். விமானம் மோதியதால் வீட்டில் தீ ஏற்பட்டு, அங்கிருந்த நான்கு பேர் உயிரிழக்க நேரிட்டது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close