கடத்தப்பட்ட நைஜீரிய சிறுமிகள் 101 பேர் திடீரென விடுதலை!

  SRK   | Last Modified : 22 Mar, 2018 12:09 am


கடந்த மாதம் நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 110 சிறுமிகளில் 101 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

நைஜீரியாவின் டபாச்சி என்ற ஊரில் உள்ள பள்ளிச் சிறுமிகள் 110 பேர் கடந்த மாதம் திடீரென மாயமானார்கள். போகோ ஹராம் அமைப்பை சேர்நத சில இஸ்லாமிய அடிப்படை தீவிரவாதிகளால் அவர்கள் கடத்தப்பட்டதாக தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென, டபாச்சியில் 101 சிறுமிகள் இறக்கி விடப்பட்டனர்.

ஒரு மாதமாக சோகத்தில் ஆழ்ந்திருந்த அந்த கிராம மக்கள், சிறுமிகளின் வரவை தொடர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால், கடத்தப்பட்ட சிறுமிகளில் 5 பேர் இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. கடத்தப்பட்ட போது அனைவரும் காரில் அடைக்கப்பட்டனர். அதில் 5 சிறுமிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர் என மற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிறிஸ்தவரான மற்றொரு சிறுமி, இஸ்லாமிய மதத்திற்கு மாறவேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகவும், அவர் மறுத்ததால் அவரை மட்டும் விடுவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எந்த பிணையத் தொகையாக கேட்கவில்லை என்றும், சிறுமிகளை விடுவிக்க அவர்களுக்கு அரசு எந்த தொகையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close