பெரு நாட்டின் புதிய அதிபரானார் மார்டின் விஸ்காரா

  Sujatha   | Last Modified : 24 Mar, 2018 07:42 am


பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா இன்று பொறுப்பேற்று கொண்டார். 

பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி மீது பான் லத்தீன் அமெரிக்கா ஓடேரெச்ச்ட் ஊழல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அடுத்து மீண்டும் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.  அப்போது பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி  சாதகமாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் ஆளுங்கட்சியினர் பேரம் பேசும் வீடியோ வெளியானதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, அதிபர் பதவியில் இருந்து குசின்ஸ்கி ராஜினாமா செய்தார். அவரது கட்சியான தென் அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது.  இதனை தொடர்ந்து பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா இன்று பொறுப்பேற்று கொண்டார். இது குறித்து மார்ட்டின் கூறியது, மக்களிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதை என் கடமை என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close