ஆஸ்திரேலிய விசா முறையில் மாற்றம்; இந்தியர்களுக்கு பாதிப்பா?

  முத்துமாரி   | Last Modified : 24 Mar, 2018 08:34 am


இந்தியர்கள் அதிகம் உபயோகிக்கும் ஆஸ்திரேலியாவின் '457' என்ற விசா முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவின் '457' விசா மூலமாக அங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்தியர்கள் தோராயமாக  22% பேர் அங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் '457' விசா அளிப்பதால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது '457' விசாவுக்கு பதிலாக மற்றொரு புதிய விசா முறையை ஆஸ்திரேலியா கொண்டு வருகிறது. 

அதன்படி, விசா பெறுவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பணிக்கு ஏற்ப விசா காலம் மாறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக 6 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close