இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 17 பேர் பலி

  கனிமொழி   | Last Modified : 31 Mar, 2018 01:42 pm


பாலஸ்தீன - இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று பத்தாயிரம் பேர் திரண்டு அந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முடியாமல் போனதால், அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  16 வயது பாலஸ்தீனிய சிறுவன் உயிரிழந்தான். மேலும், 3 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். விவசாயி ஒருவர் பீரங்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால், இஸ்ரேல் படை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.  

போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பாலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close