சந்தேகப்பட்டு மனைவியின் மொபைலை நோட்டம் விட்டால் சிறை: சவூதி அதிரடி

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Apr, 2018 09:06 pm


சவுதி அரேபியாவில், மனைவிக்கு தெரியாமல் அவரது மொபைல் போனை எடுத்து பார்க்கும் கணவருக்கு, தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது. 

சவுதி அரேபியாவில் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மனைவி தனது கணவரின் செல்போன் உரையாடல்களை ஆதாரமாக வைத்து நீதிமன்றத்தில்  விவாகாரத்து கோரி வருகின்றனராம். முக்கியமாக, மனைவிக்கு தெரியாமல், அவர்களின் போனை எடுத்து புகைப்படங்களை பார்ப்பது, சமூக வலைதள கணக்குகளை நோட்டம் விடுவது, யாருடன் பேசுகிறார் என்று கேட்டு சண்டை போடுவது, போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. 

இந்நிலையில், துணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால், அபராதத்துடன் சிறை தண்டனை அளிக்கப்படும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. இதன்படி மனைவிக்கு தெரியாமல் கணவரோ, அல்லது கணவருக்கு தெரியாமல் மனைவியோ, செல்போனை உளவு பார்த்தால் 5 லட்சம் சவுதி ரியால் அபராதம் (இந்திய மதிப்பில் 85- 90 லட்சம்) அல்லது 1 ஆண்டு சிறை தண்டனை, அல்லது இரண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close