தந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி!

  Padmapriya   | Last Modified : 12 Apr, 2018 11:27 pm

துட்டன்காமன் என்னும் எகிப்திய மன்னனின் இளம் மனைவியாகிய அங்கேஷ்னமுன் (Ankhesenamun) புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனது அப்பாவையும் தாத்தாவையும் மணந்ததாகக் கூறப்படும் எகிப்திய ராணியாகிய அங்கேஷ்னமுன் புதைக்கப்பட்ட இடத்தை எகிப்தில், புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக தேடிவந்த நிலையில் அவர் புதைக்கப்பட்ட இடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எகிப்திய மன்னரான பார்வோன் அங்கேஷ்னமுன் அங்கேனேட்டனுக்கும் அவரது மனைவி நெப்ரிட்டிக்கும்  பிறந்தவர் தான் இந்த அங்கேஷ்னமுன். அவர்களது கலாச்சாரப்படி சகோதரர்களுக்குள் திருமணம் செய்வது சகஜம் என்பதால், அங்கேனேட்டன் தனது தங்கையாகிய நெப்ரிட்டியை மணந்து கொண்டார்.


கி.மு.1332 முதல் 1327 வரை எகிப்தை ஆண்ட துட்டன்காமன் மனைவிதான் இந்த அங்கேஷ்னமுன் . கணவர் திடீரென்று இறந்துபோக அய் என்பவரை மணந்துகொண்டார் அங்கேஷ்னமுன். சில ஆவணங்கள் அவர் தனது கணவர் இறந்ததும் தனது தாத்தாவை மணந்துகொண்டார் என்றும் வேறு சில அவர் தனது தந்தையையே மணந்து கொண்டார் என்றும் கூறுகின்றன.

இந்த வருடத் தொடக்கத்தில், சுமார் 100 எகிப்திய ஆய்வாளர்கள் ராஜாக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் பகுதியில் அங்கேஷ்னமுன்னின்  கல்லறையைத் தேடும் பணியில் இறங்கினார்கள். இந்தப் பகுதி இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தாத பகுதியாகும். 

இதனைத் தொடர்ந்து ராஜ கல்லறை என்று ரேடார்களின் உதவியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இடத்தை புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவதைக் காட்டும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

டிஸ்கவரி தொலைக்காட்சி தான் இந்த அகழ்வாராய்ச்சிக்கு பொருளுதவி செய்து வருகிறது. அதனால் வெளியீட்டு உரிமைகளையும் அந்த தொலைக்காட்சியே வாங்கியுள்ளது. இந்த முழு ஆராய்ச்சி வடிவத்தை விரைவில் அந்த தொலைக்காட்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


எகிப்து மம்மிகள் ஆராய்ச்சியில் பல கண்டுபிடிப்புகளும் அக்கால கலாச்சாரங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல்கள் எப்போதும் ஆச்சரியம் அளிப்பவையாக இருக்கும். எகிப்தியர்கள் முற்காலத்தில் மன்னர்களைக் கடவுளர்களாவே கருதினார்கள். அவர்களின் கடவுள் இறந்துவிட்டால், அவரது உடலைப் பதப்படுத்தி, பிரம்மாண்டமான கல்லறையில் வைத்துப் புதைத்துவிடுவார்கள். அந்தக் கல்லறைகளுக்குள் இறந்தவர்கள்  மறுவாழ்வு வாழ்வார்கள் எனக் கருதி, அவர்கள் பயன்படுத்திய தங்க நகைகள், உடைகள், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பொருட்களை வைத்துவிடுவார்கள். இன்னும் சில கல்லரைகளில் மன்னரின் மனைவியர், அடிமைகளையும் வைத்து பூட்டிவிடுவர். இதுவே மம்மிகள் ஆகும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.