கியூபாவில் காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராதவர் அதிபராகிறார்

  Padmapriya   | Last Modified : 19 Apr, 2018 01:53 pm

கியூபாவின் புதிய அதிபரை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தேர்ந்தெடுக்க உள்ளனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் காஸ்ட்ரோ குடும்பத்தைச் சாராதவர் அங்கு அதிபராக உள்ளார்.

கியூபா புரட்சிக்குத் தலைமை தாங்கிய முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ 1959 முதல் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.  2006 முதல் ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 605 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது புதிய அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான கியூபா நாடாளுமன்றத்தின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை (நேற்று) தொடங்கியது. 

துணை அதிபர் மிக்வெல் டயாஸ் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், கியூப விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படஉள்ளார். இருப்பினும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும்,  கவுன்சில் ஆப் ஸ்டேட் (Council Of State) எனப்படும் தேசியக் குழுவுக்கும் ரவுல் காஸ்ட்ரோவே தலைவராக இருப்பார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close