ஆப்கான் வாக்குச்சாவடியில் தற்கொலைப்படை தாக்குதல்: 31 பேர் பலி!

  Padmapriya   | Last Modified : 22 Apr, 2018 05:53 pm

ஆப்கானில் தேர்தல் வாக்குச்சாவடியில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 பேர் பலியாகினர். 

ஆப்கானிஸ்தானில் பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாகவே தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 

அதன் படி இன்று காலை தலைநகர் காபூல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி தான் கொண்டு வந்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close