இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 11:42 am


இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் 5.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் அபேபுரா என்ற பகுதியின் கிழக்கே 109 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகள் என பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 60 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வினால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாம்லகி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close