கருணைக் கொலை செய்யப்பட்ட பனிக்கரடி: இனுக்காக உருகிய மக்கள்!

Last Modified : 26 Apr, 2018 06:29 pm

உலகின் ஒரே வெப்பமண்டல பனிக்கரடியான சிங்கப்பூரைச் சேர்ந்த இனுக்கா இன்று கருணைக்கொலை செய்யப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

துருவ மண்டலங்களில் மட்டுமே உயிர்வாழும் விலங்கு பனிக்கரடிகள். ஆனால், கனடாவைச் சேர்ந்த நனூக் - ஷெபா என்ற கரடிகளுக்கும் சிங்கப்பூரில் இனுக்கா என்ற ஆண் கரடி பிறந்தது. இது தான் வெப்பமண்டலத்தில் வளர்ந்த ஒரே பனிக்கரடி. 

இனுக்கா சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் செல்லப்பிள்ளை போல வளர்ந்தது. இதற்கு விலங்குகள் நல வாரியம் பல்வேறு எதிர்ப்புகளை மீறி அங்கேயே வளர்ப்பதற்கான வழிகளை உருவாக்கியது. பூங்காவின் உள்ளேயே துருவ மண்டலத்திற்கான இயற்கைச் சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டு அதில் இனுக்கா பாதுகாக்கப்பாக வளர்க்கப்பட்டது. இதில் இனுக்கா மிகவும் இயல்பாக வாழ்ந்துவந்தது.

இருப்பினும் பருவ நிலைச் சூழல், உடல்நலக்கோளாறு, வயது முதிர்வு போன்ற பிரச்னைகளால் இனுக்கா கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. கீல்வாதம், பல் மற்றும் காதுகளில் ஏற்பட்ட தொற்று, அதன் அழகிய ரோமங்கள் உதிர்வு மற்றும் உடலின் மேற்பரப்பில் பச்சை நிற பூஞ்சை படர்தல் என இனுக்காவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானது. 


இனுக்காவின் இந்த நிலை பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இனிக்காவின் 27ஆவது பிறந்ததினத்தை பிரமாண்டமாக கொண்டாடியது சிங்கப்பூர் உயிரியல் பூங்கா. ஆனால்  இனுக்காவின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் இனுக்கா கருணைக்கொலை செய்யப்பட இருப்பதாக சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நேற்று காலை இனுக்காவை கருணைக்கொலை செய்ததாக சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


இனுக்காவுக்கு பெயர் வைக்கவே சுமார் 400 பரிந்துரைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டது. அந்நாட்டின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த உலகின் ஒரே வெப்ப மண்டல பனிக்கரடியான இனுக்காவுக்கு சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் இன்று தனிப்பட்ட இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அதில் சுமார் 400 ஊழியர்கள் கலந்துகொண்டு பனிக்கரடிக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.

பொதுமக்களும் இரங்கல் குறிப்பு எழுதி இனுக்கா நினைவிடத்தில் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.