உலகிலேயே மிக வயதான சிலந்திப் பூச்சி மரணம்

Last Modified : 02 May, 2018 02:28 pm

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் ஆய்வகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சி தனது 43-வது வயதில் மரணம் அடைந்தது. 

மேற்கு ஆஸ்திரேலியாவின், மத்திய வீட் பெல்ட் பகுதியில் 1974-ம் ஆண்டு, மிகப்பெரிய சிலந்தி பூச்சியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்தச் சிலந்திக்கு 'நம்பர் 16' என விஞ்ஞானிகள் பெயர் சூட்டி, ஆய்வகத்தில் வைத்து பராமரித்து, அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தனர். 

ஆய்வில், இது வைல்டு டிராப்டோர் வகையைச் சேர்ந்த சிலந்திப் பூச்சி என கண்டுபிடிக்கப்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியில் மட்டுமே வாழும் வைல்டு டிராப்டோர் இனம் ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்காக்களிலும் வளர்ந்த மரங்களிலும் பரவலாகக் காணமுடிந்தது. 

எனவே, டிராப்டோர் வகை சிலந்திகளின் குணநலன்களை ஆய்வு செய்வதற்காக 'நம்பர் 16'  பயன்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன் அளித்து வந்த 'நம்பர் 16', குளவி  கடித்து பாதிப்புக்குள்ளானத்தில், தனது 43-வது வயதில் மரணம் அடைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்விதுள்ளனர். 

இறக்கும் தருவாயில் இருந்த நிலையிலும் 'நம்பர் 16' சிலந்தி பூச்சி, தனக்கென சிறிய வலையினை பின்னியதாக கூறிய ஆய்வாளர்கள், மனிதர்கள் சிலந்திகள் நிறையவே கற்றுக்கொடுக்கக் கூடியவை என வருத்தத்துடன் குறிப்பிட்டனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.