காற்று வருவதற்காக கதவைத் திறந்த சீன விமானப் பயணிக்கு சிறை

Last Modified : 02 May, 2018 12:23 pm

சீனாவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் காற்று வராததால் அவசரகால கதவைத் திறந்த பயணிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷேன்ஜென் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் ஜென் (25) என்ற இளைஞர் விமானத்தின் அவசரகால கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வழியில் வெளியேற முயற்சித்ததை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததும் விமானம் நிறுத்தப்பட்டது. 

விமானம் நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து மூன்று விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஆனது.

இந்நிலையில், அவசரகால கதவை திறந்ததற்கு விளக்கம் அளித்த அவர், விமானத்தினுள் காற்று வராமல் புழுக்கமாக இருந்ததால் ஜன்னலை திறந்ததாக நினைத்துக் கொண்டு அவசரக் கதவுகளை திறந்ததாக கூறியுள்ளார். கதவை திறந்த பின்தான், அது அவசர வழி என்று தெரியும் என்றும்  விளக்கம் அளித்தார். 

பின்னர், சக பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு 15 நாள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close