லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்; பலி 14 ஆக உயர்வு

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 07:53 am


லிபியாவில் நேற்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

லிபியா நாட்டில் திரிபோலி என்ற பகுதியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரண்டு தீவிரவாதிகள் தங்கள் உடலில் உள்ள குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.நா. சபை  இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கண்டனத்தை முன்வைத்துள்ளன. 

2011ம் ஆண்டு லிபிய கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகபோரிட்டதில் 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபி கொல்லப்பட்டார். இதன்பிறகு லிபியாவில்  ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு லிபியாவின் பல்வேறு இடங்களில் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close