ஜப்பான் ரோலர்கோஸ்டரில் 2 மணி நேரமாக தலைகீழாக தொங்கிய பயணிகள்

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 12:00 pm


ஜப்பானில் ரோலர்கோஸ்டர் பழுதானதில் பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தலைகீழாக தொங்கியபடி இருந்துள்ளனர். 

ஜப்பானின் ஓசாகா நகரில் உள்ள ஒரு பூங்காவில் ரோலர்கோஸ்டர் விளையாட்டு இயந்திரத்தில் ஏராளமான பயணிகள் சென்றனர். அந்த சமயத்தில் இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த போது திடீரென நின்றது. அதுவும் தலைகீழாக திரும்பிய நிலையில் அந்த இயந்திரம் நின்று போனது. சுமார் 100 அடி உயரத்தில் 60க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தனர். பயத்தில் கூச்சலிட்டு அலறினர். பின்னர் மீட்புபடைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பல மணி நேரங்களாக போராடி அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் ரோலர்கோஸ்டரில் தலைகீழாக தொங்கியபடி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close