சீனாவில் இறங்கிய வடகொரிய விமானம்: கிம் ஜாங் உன் ரகசிய பயணமா?

Last Modified : 09 May, 2018 03:14 pm

சீனாவில் வடகொரிய விமானம் திடீரென தரை இறங்கியதால், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீன பயணத்தை மேற்கொண்டிருக்கலாம் என யூகங்கள் எழுந்து உள்ளன.

வடகொரியாவின் விமானம் ஒன்று, சீனாவின் துறைமுக நகரான டாலியனில் செவ்வாய்க்கிழமை இரவு தரை இறங்கியுள்ளது. இந்த விமானம், சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது கிம் ஜாங் உன் சகோதரியும், ஆலோசகருமான கிம் யோ ஜாங் பயன்படுத்திய விமானத்தைப் போன்று இருந்ததாக கூறி, அதன் காட்சிகளை ஜப்பானின் என்.எச்.கே தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

அந்த நேரத்தில், டாலியனில் பிற விமான போக்குவரத்தும், மற்ற வாகன போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததையும் அந்த காட்சிகள் காட்டின.

ஆக, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீனாவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டதாகவே நம்பப்படுகிறது. 

இதுபற்றி சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை, அதே சமயம் உறுதி செய்யவும் இல்லை. 

கடந்த மார்ச் மாதம் இதே போல, கிம் ஜாங் உன் சீனா சென்றபோது அவரது ரயில் பயணம் பற்றி யூகங்கள் செய்திகள் வெளியாகின. ஒருவேளை இந்த யூகம் உண்மையானதென்றால் இது தொடர்பான செய்திகள் ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close